Thursday, March 29, 2012

vinveliyil ulaa

நண்டு வடிவ நெபுலா














M 1  என்று மெசியர் படத் தொகுப்பில் முதலாவதாக  இடம் பெற்றுள்ள நண்டு வடிவ நெபுலா, சீட்டா (ζ ) டாரிக்கு மிக அருகாமையில் ,ஏறக்குறைய 
6500  ஒளி ஆண்டுகள்  தொலைவில் இருக்கிறது . இதை டாரெஸ் A  என்று
வானவியலார் குறிப்பிடுகின்றார்கள் .இந்த நெபுலாவின் விளிம்பில் 
காணப்படும் வரி இழைகள் , நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் 
போலத் தோன்றுகின்றன .அதனால் இதை நண்டு வடிவ நெபுலா (Crab 
nebula ) என்று அழைப்பது வழக்கமாயிற்று . இதைத் தொலை நோக்கியால் 
மட்டுமே பார்க்க முடியும் .இது நீள் வட்டக் கோள வடிவில் ,விண்ணில் 
தோன்றும் ஒரு சூரியக் கோளுக்கும், முழு நிலவிற்கும் இடையே இருக்குமாறு 
உருவ அளவைக் கொண்டுள்ளது . இதை 1731  ல் இங்கிலாந்து நாட்டு 
மருத்துவரும் பொழுதுபோக்கு வானவியலாருமான  ஜான் பெவிஸ்  (John Bevis )
என்பாரும், 27  ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சு நாட்டு வால்மீன் ஆய்வாளரான 
சார்லஸ் மெசியரும் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர் .  
 
நண்டு வடிவ நெபுலா உண்மையில் நெடுங்காலத்திற்கு முன்பு விண்மீனாக
இருந்து ஆற்றலையெல்லாம் உமிழ்ந்து ஓய்ந்தபின் ,வெடித்துச் சிதறிச் தோன்றிய எச்சம்.
இதற்கான ஆதாரங்களை வானவியலார் திரட்டியுள்ளனர். இது வானவியலில்
ரேடியோ வானவியல் என்று கிளை தோன்றிய பின்னரே இயலுவதாயிற்று .

தொடக்க காலத்தில் விண்வெளியை கட்புலனறி ஒளியால் மட்டுமே ஆராய்ந்து அறிந்தனர். .இதன் நடைமுறை ,இரண்டாம்
உலகப் பெரும் போருக்குப் பின்னர் வியத்தகு மாற்றத்திற்கு உள்ளானது .இரண்டாம் உலகப் போர் பலத்த சேதத்தை விளைவித்தது என்றாலும் .கெட்டதிலும் ஒரு நல்லது
இருக்கும் என்பதற்கு ஏற்ப ,அதனாலும் ஒரு பயன் கிடைக்கப் பெற்றது 

இரண்டாம் உலகப் போரின் போது மாற்றி யோசித்த சில விஞ்ஞானிகள் ,பறக்கும்
விமானங்களைத் துப்பறியும் இராடர் என்ற சாதனத்தைக் கண்டுபிடித்தனர் .1930 
களில் நியூ ஜெர்சியிலுள்ள  பெல் ஆராய்ச்சிக் கூடத்தைச் சேர்ந்த காரல் ஜான்ஸ்கை
(Karl  Jansky ) என்பார் விண்வெளியிலிருந்து  வரும் ரேடியோ அலைகளை பூமியிலிருந்து
கொண்டும் ஆராயும் வாய்ப்புகளைப் பற்றி தெரிவித்திருந்தாலும் ,அதன் செய்முறை
போர் ஓய்ந்த பின்னரே வளர்ச்சி பெற்றது.
போரின் போது வேவு பார்க்க நிர்மாணிக்கப்பட்ட இராடர் அமைப்புகளில், எவ்வளவு கவனமாக
இருந்தபோதிலும் சமிக்கை அலைகளில் குறுக்கீடுகள்  எப்போதும் இருந்து கொண்டே இருந்தன . இதற்கு என்ன காரணம் என்பதை அறியாது சில காலம் குழம்பிப்
போன விஞ்ஞானிகள் பின்னர் இது சூரியனிலிருந்து வரும் ரேடியோ அலைகளான
இரைச்சலே இடையூறு செய்கிறது எனத் தெரிந்து கொண்டனர். இதன் பின்னரே விண்வெளியை
கட்புலனுக்கு உட்படாத ரேடியோ அலைகள் மூலம் ஆராய முடியும் என்ற உண்மையை
புரிந்து கொண்டனர் .1950  களில் இராடர் மூலம் ,கட்புலனறி  ஒளியை விடக் கூடுதல்
அலை நீளமுடைய ரேடியோ அலைகளைக் கொண்டு பேரண்டத்தை அலசி ஆராயும் முறை
தோன்றியது.
ரேடியோ வானவியல் ,கட்புலனறி ஒளி சார்ந்த வானவியலை விட ,சில அனுகூலங்களைக்
கொண்டுள்ளது .சூரிய ஒளியிலுள்ள நீல நிறம் பூமியின் வளி மண்டலத்தில் அதிகமாகச்
சிதறல டைவதால் , வானம் நீல நிறமாகக் காட்சி தருகிறது. என்பது ராமன் விளைவு. .
இதனால் விண்வெளியில் விண்மீன்கள் இருந்தாலும் பகல் பொழுதில் அவற்றைக்
காண முடிவதில்லை .சூரிய ஒளியிலுள்ள சிவப்பு நிறம் ,நீல நிறம் போல சிதறலடைவதில்லை.
அதனால் சூரியன் மறையும் போது   வானம் சிவப்பாகத் தோன்றுகிறது . ஆய் கருவி
நேரடியாகச் சூரியனைப் பார்க்காத வரை ,இது போன்ற ஒளிச் சிதறல் ,ரேடியோ அலை நீள
நெடுக்கையில் ஏற்பட்டு 
பாதிப்பை ஏற்படுத்துவதில்லை .இதனால் ரேடியோ வானவியல் மூலம் 24  மணி நேரமும்
வானத்தை ஆராய முடிகிறது.

 

No comments:

Post a Comment