Tuesday, August 16, 2011

Arika ariviyal

சூரியக் குடும்பத்தில் பூமி 
 
 
 
சூரியக்குடும்பத்தில் புதன்,வெள்ளி ,பூமி,செவ்வாய் ,
வியாழன்,சனி,யுராநெஸ் ,நெப்டியூன் என்ற வரிசையில்
8  கோள்கள் உள்ளன. (புளுட்டோ நீங்கலாக ).இவற்றுள்
பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழ்கின்றன . இதற்கு
என்ன காரணம் ?
                       ***************
 
நீரானது பனி,நீர்,நீராவி என மூன்று நிலைகளிலும்
இருக்கக் கூடியவாறு சூரியனிலிருந்து அளவான
வெப்பத்தைப் பெற சரியான தொலைவில் பூமி 
இருப்பதே இதற்குக்  காரணம்.
 
வியாழன்,சனி,யுரனேஷ் ,நெப்டியூன் போன்ற
பெரிய கோள்களில் ஈர்ப்பு அதிகம்,வெப்பநிலைக்
குறைவு.இதனால் ஹைட்ரஜன் நீங்கலான
வளிமங்கள் உறைந்து இருக்கின்றன. மீத்தேன்,
அமோனியா  போன்ற வளிமங்கள் தெவிட்டிய
நிலையில் உள்ளன .இவை நச்சுத் தன்மை
கொண்டவை. இவ் வளிமண்டலத்தில் உயிரினம்
தோன்றி பரிணாம வளர்ச்சியில் ஈடுபடவே முடியாது.
புதனில் சிறிதளவு கூட காற்றோ,வளிமண்டலமோ
இல்லை. வெள்ளியில் உள்ள வளி மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின்  செறிவு 
மிக அதிகம். இங்கு முற்றிலும் முரண்பாடான 
தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. செவ்வாயில் 
வளி மண்டலம் மிகவும் மெல்லியது. பூமியைவிடக் 
குளிர்ச்சியாக இருக்கிறது.நீர் உறைந்து பனிக்கட்டியாக 
இருப்பதால் உயிரினம் எல்லா கால நிலைகளிலும் 
இயல்பாக வாழக்கூடிய சூழ்நிலை  இல்லை. 

No comments:

Post a Comment