இரு பிதகோரஸ் மூவெண் அணிகளைக்கொண்டு ஒன்றுக்குமேற்பட்ட 4R4^2 எண் தொடர்புகளை ஏற்படுத்தலாம் . (x,y=z), (a,b=c) என்ற இரண்டும் எடுத்துக்கொள்ளப்படும் இரு பிதகோரஸ் மூவெண் அணிகளாக இருக்கட்டும்
(x-a)^2 + (x+a)^2 + (y-b)^2 + (y+b)^2 = (x-b)^2 + (x+b)^2 + (y-a)^2 + (y+a)^2
= 2( x^2 + y^2 + a^2 +b^2) = 2 (z^2 +c^2 )
எ.கா (3,4=5), (5,12=13) க் கொண்டு
(5-3)^2 + (5+3)^2 + (12-4)^2 + (12+4)^2 = (5-4)^2 + (5+4)^2 + (12-3)^2 + (12+3)^2
2^2 +8^2 + 8^2 + 16^2 = 1^2 + 9^2 + 9^2 + 15^2 =388
2R2^2 தொடர்புகளைக் கொண்டு புதிய 2R2^2 தொடர்புகளையும் பிதகோரஸ் தொடர்புகளையும் நிறுவமுடியும் a^2 + b^2 = c^2 + d^2 = n என்ற ஒரு 2R2^2 தொடர்பைக் கருதுவோம்
(a+b)^2 + (a-b)^2 = (c+d)^2 + (c-d)^2 = 2 (a^2 +b^2 ) = 2(c^2 + d^2) = 2n
எ.கா 2^2 + 11^2 = 5^2 + 10^2 ---> 9^2 + 13^2 = 5^2 + 15^2
ஒரு பக்கமுள்ள இரு இருமுடி மூல எண்களும் ஒரே எண்ணாக இருக்கும் நிலையில் இது பிதகோரஸ் தொடர்பைத் தருகின்றது
எ.கா 1^2 + 7^2 = 5^2 + 5^2 ---> 6^2 + 8^2 = 10^2
7^2 +17^2 = 13^2 + 13^2 ---> 10^2 + 24^2 = 26^2
No comments:
Post a Comment