Saturday, May 16, 2020

பெர்மாட் இறுதித் தேற்றம்-5


நிரூபணம் -4
மும்மடி எண் தொடர்புகளின் பொதுப் பண்பும்  தீர்வும்.

மும்மடி எண்கள் சில குறிப்பிட்ட பொதுப் பண்புகளைப் பெற்றுள்ளன. ஓரெண்ணின்  மும்மடிக்கும் (x3)  மடி மூல எண்ணிற்கும் (x) உள்ள வேறுபாடு x3 – x = x ( x2  - 1)  = (x-1)x(x+1). இது இயலெண்  தொடரில்  அடுத்தடுத்துள்ள மூன்றெண்களின் பெருக்கல் என்பதால் அதற்கு 6  ஒரு பொதுக்காரணியாக இருக்கின்றது. இப்பண்பு x ன் எம்மதிப்பிற்கும்  (x-1)x (x +1) = 6n ஆக இருக்கும்  என்று தெரிவிக்கின்றது. எனவே மும்மடி எண்களை  x3 = 6nx  + x  என்ற தொட ர்பால் குறிப்பிடலாம். மும்மடி எண்களின் இப் பண்பை  33R31  வகைச் சமன்பாடுகளில் பயன்படுத்தி பெர்மாட் இறுதித் தேற்றத்திற்கு அவை    உட்பட்டிருப்பதை உறுதி செய்யலாம்.

இரண்டு மும்மடிகளின் கூட்டுத் தொகையை ஒரு மும்மடியாகக் காட்ட முடியாவிட்டாலும் , இரண்டு , மூன்று , நான்கு என உயர் எண்ணிக்கையிலான மும்மடிகளின் கூட்டுத் தொகையாகக் காட்ட முடியும் .  2nR31 வகை  எண் தொடர்புகளுக்கான சில எடுத்துக் காட்டுகள்.

 33R31  - [3,4,5=6]3, [1,6,8=9]3, [4,17,22=25]3, [38,43,66=75]3
43R31  - [11.12.13.14.=20]3, [9,13,19,23=28]3
53R31  - [3,4,6,8,8 = 11]3, [4,4,5,6,12,=13]3,, [2,4,5,10,10= 17]3
63R31  - [1,3,3,15,21,21= 28]3, [31,33,35,37,39,41=66]3.

a3  + b3  + c3  = d3  என்ற பொதுத் தொடர்பில்  d  ன் மதிப்பு   a,b,c ன் மதிப்புக்களை விட அதிகமாக இருக்கும் என்றாலும் அவற்றின் கூட்டுத் தொகையை விடக்  குறைவாக இருக்கும்
                                                             d > a,b,c  ; d < a+b+c
எனவே  d = a +p = b + q = c+r  என்று கொள்ளலாம் . d = c + r  என்று வைத்துக்கொண்டு அதை பொதுச் சமன்பாட்டில் பதிலீடு செய்ய ,
          
                 a3  + b3  + c3  = d3
                      6(na + nb + nc) + (a+b+c) = 6nd  + d = c+r
                a+b = 6(nd – na – nb – nc) + r  =  6n + r
                a3  + b3  =(a+b)3  - 3ab (a+b) = (6n+r)3  - 3ab(6n+r)
மேலும்
                a3  + b3  + c3  = d3  = (c+r)3
                     a3  + b3  = r3 + 3cr(c+r)
இரு சமன்பாடுகளையும் ஒப்பிட,

               3c2r + 3cr2 + r3  -  (6n+r)3  + 3ab(6n+r) = 0
இருபடிச் சமன்பாட்டை தீர்வு செய்து c  ன் மதிப்பை அறியலாம் . இது r , n , (a + b )  இவற்றின் மதிப்புக்களைச் சார்ந்திருக்கிறது.

c =- (r/2) ± (1/2r) [ r4 + 288n3  r +144 n2  r2 + 24 n r3  - 4abr (6n+r) ]1/2

              r            n          a+b           a3  + b + c3  = d3
             1             1            7                  [1,6,8=9]3
             1             2          13                  [3.10,18 = 19]3
                 1             3           19                 [2,17,40 =41]3
                   1             4           25                தொடர்பு இல்லை 
             1             5           31                 [12,19,53=54]3
             1             6           37                 [14,23,70 = 71]3
                 1             7           43                 [12,31,102=103]3
             1             8           49                தொடர்பு இல்லை
              1               9            55                   தொடர்பு இல்லை

இந்த வழிமுறை a3  + b3  + c3  = (c+r)3  என்ற பொதுத் தொடர்புக்கு முழு எண்களாலான தீர்வுகளைப் பெறப் பயனுள்ளதாக இருக்கின்றது. வேறு சில எடுத்துக்காட்டுகள்

[1,6,8=9]3, [2,17,40 = 41]3 , [3,10,18=19]3, [4,57,248 =249]3 ,[5,86,460 =461]3 , [6,121,768 = 769]3,
[7,162,1190=1191]3, [8,209,1744 =1745]3 , [9,262,2448= 2449]3, [10,321,3320 = 3321]3

a  யின் எல்லா முழு எண் மதிப்புகளுக்கும்  ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட       33R31   தொடர்பை ஏற்படுத்த முடியும்.இது போன்ற எண்  தொடர்புகளை

a3 + [6Ta  - (a-1)]3  + [ 8a + 3a(a2 + a – 2) ]3  = [ 8a + 1 + 3a(a2 + a – 2) ]3

என்ற பொதுத் தொடர்பால் பெறமுடியும். மேலும்  ஒரு குறிப்பிட்ட a யின் மதிப்பிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட  எண் தொடர்புகளை நிறுவலாம். எடுத்துக்காட்டாக  (a=3) ,(a=7) என்றிருக்கும் போது
[3,4,5=6]3 ,[3,10,18=19]3 ,[3,18,24 =27]3,  [3,36,37=46]3 , [3,34,114=115]3
[7,14,17=20]3 , [7,317,525=5613, [7,162,1190 = 1191]3
போன்ற எண் தொடர்புகளைப் பெறலாம். இதில் Tn என்பது  இயல் வரிசையில் n வது முக்கோண எண்ணாகும்( Triangular number).   ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்  புள்ளிகளை  வரிசையாக அடுக்கி முக்கோண  வடிவத்தை கட்டமைக்க முடியும் .  முக்கோண வடிவில் காட்டக் கூடிய எண்ணிக்கைகளை முக்கோண எண்கள் என்பார்கள் . 1,3,6,10,15,21,28,36,45,55,..... என்ற தொடர்    முக்கோண எண்களின் இயல் வரிசையாகும். ஒரு முக்கோண எண்ணின் வரிசை எண் n என்றால் அதன் மதிப்பு இயற்கை எண்களின் இயல் வரிசைத் தொடரில் n வரையுள்ள எண்களின் கூட்டுத் தொகையாகும். எனவே n  வது முக்கோண எண்ணை  [n(n+1)] /2 என்ற தொடர்பால் குறிப்பிடலாம்.

33R31   வகை சார்ந்த எண் தொடர்புகளை உருவாக்கும் அல்ஜீப்ரா முறை

23R32 தொடர்பை உருவாக்கி அதில் ஏதாவதொரு உறுப்பு எதிர் குறியுடையதாக  இருக்குமாறு செய்துகொண்டால்  2 3R31   வகைத் தொடர்புகளைப் பெறலாம் .

                                              (x-a)3  + (x+a)3 = (x-a+7n)3  + ( x + a - n)3
இதை விரித்து சுருக்க
                          3nx2  - nx(8a-25n) + 3na2 – 24an2 + 57n3  = 0
தீர்வு செய்து x-ன்  மதிப்பை
                           x = [(8a – 25n) ± S ]/ 6 ; S2 = 28a2 – 112an – 59n2     
28a2 – 112an – 59n2 – S2 = 0 , தீர்வு செய்து  a -ன்  மதிப்பை  a = [28n ± √[ 7(171 n2 + S2)] /14

n,S க்கு விருப்பம் போல மதிப்புக்கொடுத்து a, x ன் மதிப்புக்களை அறியலாம்.

n      S         a                               x                                          எண் தொடர்பு
1       2      9/2                    13/6, 3/2                          [20 = 7 + 14 +17]3 ; [6 = 3,4,5}3
                 -1/2                 -27/6, -31/6                      
         9       - 1                    -7, -4                                 [9 =1.6.8]3  :    [6 = 3,4,5}3      
                    5                      4, 1

        23        7                       9,4/3                             [ 2.16=9,15]3 ; [25= 4,17,22]3   
                    3                      -4,11/3

(a-b)3 = a3  - b3 – 3ab(a-b) என்ற சூத்திரத்தின் மூலம் 33R31  தொடர்புகள்

a - b =  n எனில்  a3 = n3 + b3  + 3abn
 a – b = 1 எனக்கொண்டால்  a3  =  1 + b3  + 3ab
3ab யின் மதிப்பு மும்மடியாக இருக்குமாறு a   ன் மதிப்புக்களைத் தேர்வு செய்துகொண்டால் தேவையான  எண் தொடர்புகளை  உருவாக்கலாம்

a = 9 ; [9=1,6,8]3
இதில் ஒரு  உறுப்பு 1 ஆக இருப்பதால்  3ab = 3a(a-1) வெவ்வேறு a- ன் மதிப்புக்களுக்கு ஒரு மும்மடியாக  இருப்பதில்லை.மும்மடியாக்கி வழிமுறை மூலம் அனைத்து உறுப்புகளையும் மும்மடியாக்கிக் கொள்ள முடியும். மும்மடியாகாத இரு உறுப்புகளில்  ஒரு உறுப்புடன் மும்மடியாக்கும் மதிப்பொன்றைக் கூட்டிஅல்லது கழித்துக் கொள்ள , மற்றொரு உறுப்புடன் அதே மதிப்பைக் கழித்து அல்லது கூட்டிக் கொண்டு அவ்விரு உறுப்புக்களையும் மும்மடியாக்கிக்கொள்ள முடியும்.

a=19 ;    193  =  1 + 183   +1026; 1+1+26=27 = 33; 1026 – 26 = 1000-= 103;   [19 = 3.10,18]3
a = 41;   413 = 1 +403 + 4920 ; 1+7 =8 = 23 ; 4920 -7 = 4913 = 173 ;  [2,17,40=41]3
a=115;  1153  = 1 + 1143 + 39330 ; 1+26 = 27 = 33 ; 39330-26 =39304= 343 ; [115 =3,34,114]3
a=249;  2493 = 1 + 2483  + 185256 ; 1 + 63 = 64= 43; 185256-63 =185193 = 573 [249=4.57.248]3
  
an + bn + cn  = dn என்ற பொதுத் தொடர்பிற்கான எண் தொடர்புகளை மூலத் தொடர்புகளைக் கொண்டும் பெறமுடியும்.
1 + {(q2 -1)/2q]2 =  {(q2 +1)/2q]2 , 1 + {(r2 -1)/2r]2 =  {(r2 +1)/2r]2 என்ற இரு மூலத் தொடர்புகளைக் கொண்டு 1 +{(q2 -1)/2q]2  + {(q2 +1) (r2 -1)/4qr]2 = {(q2 +1) (r2 +1)/4qr]2  என்ற விரிந்த மூலத் தொடர்பைப் பெறலாம். இதில்  q,r இரண்டும்  சார்பிலா மாறிகளாக இருப்பதால், அவைகளுக்கு விருப்பம் போல மதிப்புக்களைக் கொடுத்து , மூன்று இருமடிகளின் கூடுதலை ஒரு இருமடியாகக் காட்டும் எண் தொடர்புகளைப் பெறலாம் .
q=2, r =3 à 242 + 182 + 402  = 502  à 122 + 92 + 202 = 252
q = 3, r = 2à  242 + 322  + 302 = 502 à 122+ 162 + 152  = 252
இதன் மூலம் மும்மடிகளுடனான தொடர்பையும் பெறலாம். [(q2 -1)/2q]2 =a3 ; {(q2 +1) (r2 -1)/4qr]2 = (1+a3) x ; (1+a3) x =b3 , {(q2 +1) (r2 +1)/4qr]2  = (1+ a3) (1+ x) = c3. x = b3/(1+a3) என்பதால் 1 + a3 + b3 = c3 என்ற தொடர்பைப் பெறலாம்.
x = 512/217  ; (1 + x) (1+a3) = c3 à [1.6,8=9]3
 x = 125/91 ; [ 3,4,5=6]3
x = 4913/3087 ; [7.14.17=20]3
x = 9261/12691 ; [18.19,21=28]3

33R31     வகை பொதுச் சமன்பாட்டில் {a3 + [6Ta  - (a-1)]3  + [ 8a + 3a(a2 + a – 2) ]3  = [ 8a + 1 + 3a(a2 + a – 2) ]3 }  ஏதாவதொரு மூல  எண் சுழியானால்  அது 2 3R31   வகைக்கான ஒரு பொதுச் சமன்பாடாகும். a  சுழியானால் இச் சமன்பாடு 13  = 13 என்று மட்டுமே மாற்றம் பெறுகின்றது.  b சுழியானால் இச் சமன்பாடு 6Ta = (a-1) என்ற நிபந்தனையை ஏற்படுத்துகின்றது . இந்த நிபந்தனை a = 0 , Ta  = 0  என்ற நிலையில் மட்டுமே உண்மையானதாக இருக்கின்றது. c = 0 எனில் , a ஒரு சிக்கல் எண்ணாகி விடுகின்றது. ஒரு உறுப்பைச் சுழியாக்கிவிட்டு 33R31  தொடர்பை 23R31  தொடர்பாக மாற்றமுடியாது என்ற உண்மை,  பெர்மாட் இறுதித் தேற்றத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.
 
கணிதவியல் அறிஞர்களால்  ஓட்றை  மாறியால் நிறுவப்பட்ட    தொடர்புகளைக் கொண்டும் இதை உறுதி செய்ய முடியும்.   சான்டாசெக் (J. Jandasek ) 33R31 வகைத் தொடர்புகளுக்கான ஒரு மாறியுடன் கூடிய  ஒரு பொதுத் தொடர்பைத்  தந்துள்ளார்,  
n3 + (3n2+2n+1)3 + (3n3+3n2+2n)3 = (3n3+3n2+2n+1)3

இதிலுள்ள இரண்டாவது உறுப்பு சுழியானால்  n -ன் மதிப்பு   சிக்கலெண்ணாகிவிடுகின்றது n = [ (-1+ i 2)/3]. இதனால் தொடர்பில் உள்ள அனைத்து உறுப்புக்களுக்கு முழு எண்ணாக இருப்பது தவிர்க்கப்படுகின்றது

ஆம்போனின் (Ampon)  இது போன்ற பொதுத் தொடர்பும் இதே கருத்தை சுட்டிக்காட்டுவதாக  இருக்கின்றது.  
(3n2)3 + (6n2+3n+1)3 + (9n3+6n2+3n)3 = (9n3+6n2+3n+1)3
33R31 வகைத் தொடர்பிலுள்ள ஏதாவதொரு உறுப்பைச் சுழியாக்கினால் சார்பிலா
மாறி அல்லது மாறிகள் நிபந்தனைக்கு உட்பட்டு பின்ன அல்லது கூறுபடா அல்லது சிக்கலெண்களை மட்டும் ஏற்பதால்   பிற உறுப்புகள்  முழு எண்களாக இருப்பதில்லை. இது முழு எண்களுடன்  33R31 வகைத்  தொடர்பை  23R31  வகைத்  தொடர்பாக மாறவே முடியாது என்ற உண்மை பெர்மாட் இறுதித் தேற்றத்திற்கு மற்றொரு நிரூபணமாகிறது .

1 + [(k2 -1)/2k]}2 =[(k2 + 1)/2k]2 என்ற மூலத் தொடர்பைக் கொண்டு 33R31 வகைத்  தொடர்பிற்கான  பல சூத்திரங்களை நிறுவமுடியும் . எடுத்துக்காட்டாக இத் தொடர்பை இருமடியாக்கிச் சுருக்கினால் , இருவேறு மூல எண்களின்  நான்கு மடிகளின் வேறுபாடு , இருவேறு  இருமடிகளின் கூடுதலாக இருக்கும் என்பதற்கான ஒரு சூத்திரத்தைப் பெறமுடியும்.
(k2 + 1 )4 - (k2 – 1)4 = [2k(k2+ 1)]2  + [2k(k2- 1)]2
மூன்று இருமடிகளின் கூடுதலை ஒரு இருமடியாகக் காட்டும் சூத்திரம்
 [(2k)2]2 +[2k(k2- 1)]2 + (k4 – 1)2  = [(k2 + 1)2]2
பிதகோரஸ்  மற்றும் பீல் தொடர்புகளில் மடி மூல எண்கள் மடிகளாக  இருப்பதில்லை என்பதைப்போல  3nRn1   வகைத்  தொடர்புகளிலும்  மடி மூல எண்கள் மடிகளாக இருப்பதில்லை  என்றும் நிரூபிக்கலாம்.
[(k2 -1)/2k] = q2  எனில் , [(k2 + 1)/2k]2 = 1 + q4 ; {[(k2 + 1)/2k] x [(k2 -1)/2k]}2 =q4 ( 1 + q4) இருமடி மூலம்  ஒரு இருமடியாக இருக்க வேண்டுமானால்   1 + q4  = r4 என்றிருக்க வேண்டும். முழு எண்களால் இத் தொடர்பு சாத்தியமில்லை என்பதால் அனைத்து மடி மூல எண்களும்  மடிகளாக இருப்பதில்லை எனலாம். an + bn + cn  = dn  என்ற தொடர்பில் 1 + qn = rn         என்ற தொடர்பை முழு எண்களால் நிறைவு செய்ய முடியாததால்  அனைத்து மடி மூல எண்களும் மடி எண்களாக இருப்பதில்லை  என்று கூறலாம்.

அதுபோல  an + bn + cn  = dn  என்ற தொடர்பில்  அனைத்து எண்களும் பகா எண்களாக இருப்பதில்லை  என்றும் நிறுவலாம். இத் தொடர்பில்   நான்கும் முறையே  P1, P2, P3, P4  என்ற  பகா  எண்களாக இருப்பதாகக் கொள்வோம் . a = P1  என்றும் an [(k2 -1)/2k]}2  = P2n என்றும் கொண்டால் [(k2 + 1)/2k]2 = 1 + (P2/a)n . எனவே  an {[(k2 + 1)/2k] x [(k2 -1)/2k]}2 = p2n { 1 + (P2/a)n] = P3n . இது P22n = P1n ( P3n – P2n) என்ற நிபந்தனை மூலம்  P2 ஒரு பகா எண்ணாக இருக்கமுடியாது என்று தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment